TamilsGuide

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை - 4 மாடுகள் மீட்பு - ஒருவர் கைது

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் இயங்கி வந்த சட்டவிரோத மாடறுப்புக்கூட மொன்றைப் பொலிஸார் இன்று (29) அதிரடியாக முற்றுகையிட்டு, 3 பசுமாடுகள் உட்பட 4 மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன் 58 கிலோகிராம் மாட்டிறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் அறுக்கப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேறிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, 4 மாடுகளும் இறைச்சியாக்குவதற்காகக் தயார் நிலையில் கட்டப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மீட்கப்பட்ட மற்றும் இறைச்சியாக்கப்பட்ட மாடுகள் திருடப்பட்டவையா என்ற கோணத்திலும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment