• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நார்வே மன்னர் 5ம் ஹரால்டு காலமானார்! பட்டத்து இளவரசர் ஹாக்கோன் மன்னராக பதவியேற்பு

நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டு, அரிய வகை இரத்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 6.35 மணிக்கு காலமானார்.

நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் மறைவைத் தொடர்ந்து அவரது ஒரே மகனான பட்டத்து இளவரசர் ஹாக்கோன், ‘எட்டாம் ஹாக்கோன்’ என்ற பெயருடன் நார்வேயின் புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ளார்.

14 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு நார்வே மண்ணில் பிறந்த முதல் மன்னர் ஹரால்ட் ஆவார். தனது தந்தை மன்னர் 5ம் ஒலாவின் மறைவுக்குப் பிறகு, 1991-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் நார்வேயின் மன்னராகப் பதவியேற்றார்.

சுமார் 35 ஆண்டுகள் அவர் அந்நாட்டை வழிநடத்தினார். நார்வே மன்னராட்சி முறையை மிகவும் எளிமையாக்கி, மக்களுடன் மக்களாக நெருக்கமாகப் பழகியவர்.

அரசக் குடும்பம் அல்லாத, நாட்டின் சாதாரண குடிமகள் சோன்யாவை மணந்தார். 2011-இல் நார்வேயில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் போது நாட்டை ஒற்றுமைப்படுத்தியதில் இவரது பங்கு முக்கியமானது.

ஹரால்டுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில், ஹாக்கோன் தற்போது நார்வே மன்னராக பொறுப்பேற்றுள்ளார். 
 

Leave a Reply