TamilsGuide

தமி ழீ ழ த்தின் முதல் மாமனிதர் என்ற பெருமைக்குரிய ஆ.இராசரத்தினம் ஐயாவின் நினைவுநாள் 

தமி ழீ ழ த்தின் முதல் மாமனிதர் என்ற பெருமைக்குரிய ஆ.இராசரத்தினம் ஐயாவின் நினைவுநாள் இன்றாகும்.

"த மி ழீ ழத்தில் ஆயுதப்புரட்சியை தமிழர்கள் ஏற்படுத்தாவிட்டால் தமிழினம் அழிந்துவிடும், 50,000 இளைஞர்கள் இருந்தால் எமது மண்ணை மீட்டுவிடலாம்" என்ற அறைகூவலை முதன்முதலில் விடுத்தவர் ஐயா ஆவார்.

04.03.1961இல் சிங்கள ஸ்ரீக்கு எதிராக திருகோணமலை கச்சேரிவாயிலில் மறியல்செய்த தமிழர்கள் மீது சிறிலங்கா காவாலித்துறை தடியடிநடத்தியது. இத்தாக்குதலில் காயம டைந்த மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் 23.03.1961 அன்று காலமானார். இவருடைய இறுதிச்சடங்கு மிகவும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நடந்தேறியது. இதனைத்தொடர்ந்து தமிழரசுக்கட்சியின் அகிம்சாவழி தமிழர்கட்கு விமோ சனத்தை ஈட்டித்தராது என இதில் கலந்துகொண்ட உணர்வாளர்கள் சிலரால், சிங்கள அரசின் வன்முறைக்கு வன்முறையே பதிலென்ற முடிவில் அமைப்பொன்று கோபாவேசத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

மேற்படி அமைப்பில் ஏறத்தாள இருபதுபேர்வரை இணைந்திருந்ததாக மூத்தபத்திரிகையாளரான சபாரத்தினம் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கோணேஸ்வரத்தில் உறுதியெடுத்தவர்களில் ஐயா இராசரத்தினமும் ஒருவராவார்.

ஆயுதப்பயிற்சிக்காக கண்டி சென்று அங்கே பயிற்சி பெற்றுக்கொண்டபோதும், இக்குழுவிலிருந்த அமிர்தலிங்கம் போன்றோர் ஐ.தே.க வில் சரணடைந்ததால் இந்த அமைப்புச் சிதைந்துபோனது.

பின்னர் TNT (புதிய தமிழ்ப்பு லி கள்) எனும் பெயரை உருவாக்கினார். அதையே முதலில் தேசியத்தலைவர் பயன்படுத்தினார். அத்தோடு தலைவரின் அன்பிற்கும் பாத்திரமானார். மானசீகமாக தனக்கு அறிவுரைகள் வழங்கிய இவரை, 1990இல் அவருடைய சொந்த இடமான (மட்டுவில்) சாவகச்சேரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் "தமி ழீ ழத்தின் முதலாவது மாமனிதர்’என மதிப்பளித்தார் தேசியத்தலைவர் அவர்கள்.

(இராசீவ் கொலைவழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட "தாணு அக்கா" இவரது மகள் எனக்கூறப்படுகிறது)

புகழ்வணக்கம்
Romania Ar

Leave a comment

Comment