TamilsGuide

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தலைமன்னார் பியர் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான கோகுலன் சோனியா(வயது-28) என தெரிய வந்துள்ளது.

தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் 2 பிள்ளைகளின் தாயான குறித்த இளம் குடும்பப் பெண் உடனடியாக தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் உயிரிழந்தார்.

தாக்குதலை மேற்கொண்ட உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் 32 வயதுடைய கணவர் தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் வைத்து தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலம் சடலப் பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குறித்த பெண்ணிற்கு 7 மற்றும் 10 வயதுடைய இரு பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணவன் மனைவிக்கு இடையில் பிரிவு காணப்பட்ட நிலையில்இ அண்மையில் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபரிடம் தலை மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment