• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மதவாச்சியில் காட்டு யானை தாக்கியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழப்பு

இலங்கை

மதவாச்சி, புல்எலிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 52 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ரம்பக்குளம பகுதியைச் சேர்ந்த நபரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தனது உறவினர் வீடொன்றில் நடைபெற்ற தான நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே, திடீரெனக் குறுக்கிட்ட காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply