• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடையை விமர்சித்த ஈரான்

இலங்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடை பிரசாரத்தை ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) நிராகரித்துள்ளார்.

"பொருளாதார டி-டே" (Economic D-Day) என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கம் கொண்டது என்று அவர் விமர்சித்துள்ளார்.

தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், வாஷிங்டனின் முன்னெப்போதும் இல்லாத கடன் மற்றும் அதிகரித்து வரும் வட்டிச் செலவுகள் மீதான கவனத்தை திசைதிருப்பவே இந்த நகர்வு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.

தோல்வியடைந்த கொள்கைகளை மீண்டும் பின்பற்றுவது மேலும் தோல்வியைத் மட்டுமே தரும் என்று எச்சரித்த அராக்சி, அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதம் உலகளாவிய பொருளாதாரத்திற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply