• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேலின் எதிர்ப்புக்கு மத்தியில் ஹமாஸுடன் அமெரிக்கா முக்கிய பேச்சுவார்த்தை

அமெரிக்க ஆதரவு காசா அமைதித் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் மத்திய கிழக்குத் தூதர் ஜாரெட் குஷ்னர் ஹமாஸுடன் நடத்திய பேச்சுவார்த்தை சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக ஈரான் மாறியுள்ள நிலையில் இந்த நகர்வு ட்ரம்ப் தரப்புக்கு முக்கியத்துவம் மிக்கதாய் மாறியுள்ளது.

இதன்படி ஜாரெட் குஷ்னர் நேற்றைய தினம் எகிப்தில் ஹமாஸின் புதிய தலைவர் கலீல் அல்-ஹய்யா தலைமையிலான தூதுக்குழுவை சந்தித்தார்.

கடந்த மாதம், காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களின் முழுமையான ஆயுதக் களைவு குறித்து உடன்பாடு எட்டப்பட்டதாக ட்ரம்பின் அமைதி வாரியம் தெரிவித்தது.

கடந்த வாரம், இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கும், ஒரு புதிய பாலஸ்தீனிய குடிமை நிர்வாகத்தின் கீழ் காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அழைப்பு விடுக்கும் ட்ரம்பின் 15 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தது.

இந்நிலையில் இஸ்ரேலின் நிராகரிப்பைக் கண்டித்து எட்டு இஸ்லாமிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டன.

இதன்படி காசாவில் அமைதியைக் கொண்டுவரும் நோக்கத்தில் ஒரு சர்வதேச அமைப்பாக உருவாக்கப்பட்டு, பின்னர் உலகளாவிய மோதல்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட அமைதி வாரியத்திற்கு ட்ரம்ப் தலைமை தாங்குகிறார்.

காசா பகுதிக்கு கடந்த ஆண்டு போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகு, இந்த மட்டத்தில் நடைபெறும் முதல் சந்திப்பு இது என்று குஷ்னர் ஹய்யாவைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
 

Leave a Reply