2 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்..
சினிமா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யாவின் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் 2 நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
லக்கி பாஸ்கர் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை தந்த இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக நடிகை மமிதா பைஜூ நடிக்க, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த கருப்பு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் விஸ்வநாத் & சன்ஸ் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. காதல், நகைச்சுவை, எமோஷன், உறவுகள் என பல விஷயங்களை உள்ளடக்கிய கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் 2 நாள் வசூல் குறித்த முழு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாள் இப்படம் உலகளவில் ரூ. 34 கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாம் நாளில் ரூ. 46 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





















