மத்திய கிழக்கு பதற்றம் - அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மற்றும் அரசியல் பதற்றங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளமை உலக நாடுகளில் பதற்றத்தை ஏற்படுடததியுள்ளது.
இந்தநிலையில், ஈரான் தோற்கடிக்கப்பட்ட பின்னர், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை, ":அமெரிக்காவின் பிராந்தியம்" என விரைவில் அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த நீர்சந்தி எப்போதுமே ஈரானின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்றும், ஈரானின் அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் கடந்து செல்ல முடியாது என்றும் ஈரானிய இராணுவம் பதில் அளித்துள்ளது.
இதற்கிடையில், தெஹ்ரானை முற்றாக தனிமைப்படுத்தும் நோக்கில், ஈரான் மீது இதுவரை கண்டிராத கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) எச்சரித்துள்ளார்.
இதேவேளை, லெபனான் அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைப் போக்கை ஏற்க முடியாது என்றும், இது "சரணடைவதற்கு" சமம் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசிம் (Naim Qassem) குற்றம் சாட்டியுள்ளார்.
லெபனான் அரசு இஸ்ரேலின் நிபந்தனைகளுக்குப் பணியக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை ஏமனின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மொகா துறைமுக நகர் மீது ஹு தி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






















