சிவன் சுப்பிரமணி இயக்கத்தில் பொம்மி அப்பா பேரு சிவன்
சினிமா
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற படமாக இனிவரும் காலங்களில் பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்வு பூர்வமாக சொல்லும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.
சிவன் சுப்பிரமணி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்து நடித்து இயக்கும் படம் ‘பொம்மி அப்பா பேரு சிவன்’. சிவன் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் குறித்து இயக்குனர் சிவன் சுப்பிரமணி கூறியதாவது:-
கிராமத்தில் வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் தனது பெற்றோரை இழந்து உறவினர்களின் ஆதரவு இல்லாமல் எப்படி படித்து வாழ்க்கையில் சாதிக்கிறார் என்பதே படத்தின் கதை.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற படமாக இனிவரும் காலங்களில் பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்வு பூர்வமாக சொல்லும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.
மேலும் ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம் இதில் வரும் கதாபாத்திரங்களும் படத்தை பார்க்கும் அனைவரது மனதையும் கவரும்.
சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.





















