• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மொத ராத்திரி டிரெய்லர் வெளியானது

சினிமா

ராஜா கருப்பசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடித்துள்ளப் படம் மொத ராத்திரி.

இவர்களுடன் சேத்தன், வெங்கடேஷ், பகவதி பெருமாள், பானுப்ரியா மற்றும் சங்கீதா பாலன் ஆகியோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

கிராமப்புற பின்னணியில் ஒரு வித்தியாசமான திருமணம் நடக்கிறது. புதுமணத் தம்பதியரின் முதலிரவு அன்று எதிர்பாராத பல திருப்பங்களும், பொய்களும், குழப்பங்களும் அரங்கேறுகின்றன. இதனால் ஏற்படும் கலகலப்பான மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

படம் ஆக.21ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. 
 

Leave a Reply