• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை குறித்து ஈரான் விளக்கம்

ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை குறித்து பரவி வரும் தகவல்களை ஈரான் மறுத்துள்ளது. மொஜ்தாபா கமேனி முழுமையான மற்றும் ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

மொஜ்தாபா கமேனியுடன் சுமார் 7 முதல் 8 மணி நேரம் நீடித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னரே ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

பல மணி நேரம் தொடர்ந்து அமர்ந்து விரிவாக ஆலோசனை நடத்தக்கூடிய ஒருவருக்கு குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினை இருப்பதாகக் கூற முடியாது என பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியாகியிருந்த மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை தொடர்பான தகவல்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply