மிலன் விமான நிலையத்தில் வாகனம் மீது மோதிய ஜெட் விமானம்
இத்தாலியின் மிலன் லினேட் விமான நிலையத்தில், நேற்று (9) தரைவழியாகச் சென்றுகொண்டிருந்த ஹாக்கர் பீச்கிராஃப்ட் 400A தனியார் ஜெட் விமானம் மீது தரை கையாளும் வாகனம் ஒன்று மோதியதால் அங்க்கு பரபரப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், இது சில விமானச் செயல்பாடுகளில் தாமதத்தை ஏற்படுத்தியது. அதேசமயம் வாகனம் பீரிய சீததிற்கு உள்ளாகியுள்ளதுடன், விமானத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்த புகைப்படங்க்களும் வேளியாகியுள்ளது. அத்துடன், வரவிருந்த இரண்டு விமானங்கள் பெர்கமோ ஓரியோ அல் செரியோ மற்றும் மிலன் மால்பென்சா விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்படப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





















