ஆக.26-ல் தியேட்டருக்கு வரும் டாக்சிக் - டிரெய்லர் தேதி இதோ!..
சினிமா
‘டாக்சிக்’ படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் அடுத்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
'சுட்டா சூரியனை' தான் ஆல் டைம் ஃபேவரிட்!- ஜேசன் சஞ்சய் பேட்டியால் ட்ரெண்டாகும் யுவன் பாடல்!
‘கே.ஜி.எஃப்’ திரைப்படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, கன்னடத் திரையுலகின் 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘டாக்சிக்’ (Toxic: A Fairytale for Grown-Ups). மலையாளத்தின் முன்னணி இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கும் இத்திரைப்படம், ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஒரு பக்கா ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இத்திரைப்படம் தயாராகியுள்ளது. இதில் 'ராயா' என்ற பவர்புல் கதாபாத்திரத்தில் யஷ் நடித்துள்ளார்.
இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய் மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி பான்-இந்திய நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் கதாபாத்திர போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள ‘டாக்சிக்’, முன்னதாக கடந்த மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 26-ஆம் தேதி இப்படம் உலகளவில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
‘டாக்சிக்’ படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் அடுத்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘டாக்சிக்’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வருகிற 8-ஆம் தேதி வெளியாக உள்ளது. டிரெய்லரை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.






















