• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் காணிகள் அரச காணிகள் விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.

இராணுவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பி அருண ஐயசேகர அவர்களும்,  கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான உபாலி சமரசிங்க அவர்களும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr..செ.திலகநாதன் அவர்களும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்இ முப்படை இராணுவ தளபதிகள்,  முல்லைத்தீவு மாவட்ட இராணுவ தளபதிகள்,  பிரதேச செயலாளர்கள்,  கரைதுறைபற்று தவிசாளர்,  பிரதேச சபை உறுப்பினர்கள்,  பொது அமைப்புக்கள்,  தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கிடையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவ முகாம் உள்ள காணிகள்,  கேப்பாப்புலவு இராணுவ முகாம் உள்ள காணிகள்,  கிளிநொச்சியில் இராணுவ முகாம் உள்ள காணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு இதற்கு விசேட குழு அமைத்து காணி விடுவிப்பு தொடர்பாக பரிசீலிக்கப்படவுள்ளது தொடர்பாக பிரதி அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply