• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தகவல்

இலங்கை

கொழும்புத் துறைமுகத்திலிருந்து மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில், ஒரு வர்த்தகக் கப்பலிலிருந்து 17 வெற்று கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த விபத்து, 06° 54′ வடக்கு அட்சரேகை மற்றும் 079° 32′ கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், தற்போது நிலவும் கடல் நீரோட்டங்கள் காரணமாக, பெருவளை முதல் புத்தளம் வரையிலான நீர்கொழும்பு வழியான கடல் பகுதியில் இந்தக் காலிக் கொள்கலன்கள் நிலத்தை நோக்கி மிதந்து வர அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, அப்பகுதிகளில் இயங்கும் மற்றும் பயணிக்கும் அனைத்து பலநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் இது தொடர்பாக மிகவும் கவனமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மிதந்து கொண்டிருக்கும் இந்தக் கொள்கலன்களைக் கண்டால், உடனடியாக மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களத்தின் வானொலிச் செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply