கார்த்தியின் சர்தார் 2 டீசர் வெளியானது
சினிமா
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ரஜிஷா விஜயன், மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளப் படம் சர்தார் 2. 2022-ல் வெளியான சர்தாரின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் டீசர் வெளியாகி உள்ளது.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.























