தமிழில் கடைசிவரை lead heroine வாய்ப்பு கிடைக்கவே இல்லை ஆனால்..
சினிமா
தமிழில் கடைசிவரை lead heroine வாய்ப்பு கிடைக்கவே இல்லை ஆனால் 10 நாள் பார்த்தாலும் கண்ணை நகர்த்த தோணாத பேரழகி
.
ஜின்னு கண்ணு, குதுர பல்லு (உண்மையில் பெண்களுக்கு நீண்ட பல் ஈர்க்கும் ), chubby cheek சொல்லிட்டே போலாம்
.
நடிகை கீதா தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத தூண் என்றே சொல்லலாம் ஆனால் தமிழ் சினிமா இவரை வில்லன்களால் க*ற்ப*ழித்து கொ*ல்லப்*படும் அல்லது பரிதாபமாக சா*கடிக்கும் தாயாகவே பார்த்ததே தவிர இத்தனை பேரழகு இருந்தும் இவருக்கு கதாநாயகி அந்தஸ்து கிடைக்கவே இல்லை.
.
தமிழில் அதிக ஹிட் படங்கள் அதிக ஹிட் பாடல்கள் நடித்த ஒரே நடிகை
.
இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானது பைரவி என்ற ரஜினி படத்தில் பைரவி என்ற முக்கிய கதாபாத்திரமான ரஜினியின் தங்கச்சியாக
.
முதல் படத்திலேயே இவர் r*ap*e செய்யபடுவார்…அந்த படம் நடிக்கும்போது இவர் ஏழாம் வகுப்பு படிக்கும் சின்னப்பெண்
.
இப்படி சொன்னால் கொச்சையாக இருக்கும்..இருந்தாலும் இதுதான் உண்மை இதை சொல்லித்தான் ஆக வேண்டும்….தமிழ் சினிமாவில் அதிகம் r*ap*e க்கு உள்ளான கதாபாத்திரம் நடித்த நடிகையில் இவரும் ஒருவர்
.
அடுத்த வருடமே அதாவது இவர் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ரஜினிக்கு ஜோடியாக நினைத்தாலே இனிக்கும் படத்தில் ஒரு பாட்டிக்கு மட்டும் வரும் hotel receptionist கதாபாத்திரம் நடித்திருப்பார்…எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் குத்தாட்டம் போட்ட ரஜினின்னு டைட்டில் வைக்கலாம்னு நெனச்சேன் ????????
.
அது வேற எந்த பாட்டும் இல்ல - நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம் பாட்டுதான்
.
இவங்க lead heroine னா நடிச்சது ஒரே படம்தான் சத்யராஜ் நடிச்சு கமல் produce பண்ண கடமை கண்ணியம் கட்டுப்பாடு..ஆனா அந்த படத்துலயும் ஹீரோ கூட dance ஆடி love பண்ற எல்லா heroine மாதிரி role கிடையாது பாவப்பட்ட வேடம்தான்…காரணம் அந்த படத்துல பாட்டும் கிடையாது.
.
புதுப்புது அர்த்தங்கள் படத்துல நெகடிவ் ரோல் பண்ணி மெரட்டி விற்றுப்பாங்க
.
அதுக்கப்றம் தெரியாத்தனமா கேலடி கண்மணி படத்துல அம்மாவா நடிச்சு கற்பூர பொம்மை ஒன்று பாட்டு பயங்கர ஹிட் ஆய்டுச்சு அதுல இருந்து தொடர்ந்து அம்மா ரோல் குடுத்து அமுக்கி வச்சுட்டானுங்க
.
தொடர்ந்து அம்மா ரோல் குடுத்ததால அம்மா ரோல்லையே பல variation காட்டிருப்பாங்க…
.
இத TR புலி audio launch speech style ல படிங்க…இவங்க அன்பான அம்மா, இவங்க அடங்கிபோற அம்மா, இவங்க அழுமூஞ்சி அம்மா, இவங்க ஆக்ரோஷ அம்மா இப்படி அம்மா ரோல் பல பண்ணிட்டாங்க
.
K பாலச்சந்தர் படத்துல maximum இவங்கள cast பண்ணிடுவாரு எல்லாரும் இவங்களுக்கு அம்மா ரோல் கொடுக்கும்போது அவர் மட்டும் அழகன் படத்துல மம்மூட்டிய காதலிக்குற மூணு heroine ல ஒரு heroine ரோல் குடுத்துருப்பாறு…ஆனா இவங்க அம்மாவா நடிக்க புள்ளையார் சுழி போட்டதே KB சார் தான்…இரு கோடுகள் 1969 ல வந்த படத்த கன்னட version ல 84 ல எடுத்தாரு அதுல கீதாவ 21 வயசு இருக்கும்போதே 3 கொ*ழந்*தைக்கு அம்மாவா நடிக்க வச்சுட்டாரு
.
ஆரம்பத்துல கு*ழந்*தைக்கு அம்மா அப்புறம் heroines க்கு அம்மா then…1997-ல் வாசன் என்ற Chartered Accountant-ஐ கல்யாணம் பண்ணி அமெரிக்கா ல செட்டில் ஆகி ஒரு மகன் பிறந்ததால் Real life அம்மாவா மாறுனாங்க..5 வருஷம் நடிக்கல 2003 ல திரும்பவும் entry குடுத்து ஹீரோக்களுக்கு அம்மாவா நடிச்சாங்க
.
இதுக்கப்ரம் இவங்க ரஜினி கமலுக்கும் அம்மாவா நடிக்குறத பாத்துட்டேன்னா im finish.
Meera Mahadhi






















