• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடுத்த ஆண்டு கிராமி விருதுகளை புறக்கணித்த BTS இசைக்குழு

சினிமா

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சிறந்த இசைக்கு பல்வேறு பிரிவுகளில் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. ரெக்கார்டிங் அகாடமி என்ற அமைப்பால் வழங்கப்படும் இவ்விருதுகள் இசைக்கான ஆஸ்கார் என்றே கூறலாம்.

இந்நிலையில் தென் கொரியாவை சேர்ந்த பிரபல இசைக்குழுவான BTS, அடுத்த ஆண்டு கிராமி விருதுகளுக்கு தங்கள் படைப்பை சமர்ப்பிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது.

கிராமி விருதுகளில் இருந்து விலகும் பிடிஎஸ் உடைய முடிவுக்கு பின்னால் உள்ள காரணம் இனப்பாகுபாடு.

அமெரிக்காவை சேர்ந்த ரெக்கார்டிங் அகாடமி அமைப்பு அதன் கிராமி விருதுகளில் ஒரு புதிய பிரிவை சேர்த்துள்ளது. அதன் பெயர் 'சிறந்த ஆசிய பாப் இசை' என்பதாகும். இதுவரை இப்படி ஒரு பிரிவு கிராமி விருதுகளில் இல்லை.

2027ஆம் ஆண்டிற்கான 69வது கிராமி விருதுகள் விழாவில் இந்த பிரிவு அறிமுகப்படுத்தப்படும் என ரெக்கார்டிங் அகாடமி அறிவித்தது.

இது இசையை மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் இது பிரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆண்டின் சிறந்த ஆல்பன் உள்ளிட்ட முதன்மை விருது பிரிவுகளில் இருந்து ஆசியக் கலைஞர்களை

போட்டியிட அனுமதிப்பதற்குப் பதிலாக தனியாக ஒரு பிராந்தியப் பிரிவை உருவாக்குவது அவர்களை முதன்மைப் போட்டியிலிருந்து ஒதுக்கி வைக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த காரணத்தால் அடுத்த ஆண்டு தங்களின் சமீபத்திய ஆல்பமான 'Arirang' உட்பட எந்தவொரு படைப்பையும் கிராமி விருதுகளுக்கு அனுப்பப் போவதில்லை என பிடிஎஸ் குழுவின் தலைவர் ஆர்.எம் மற்றும் கலைஞர்கள் ஜின், சுகா, ஜே ஹோப், ஜிமின், வி, ஜங்குக் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தங்கள் இசையை பிராந்தியம் அல்லது மொழியின் அடிப்படையில் பிரித்துப் பார்ப்பதை விட, இசையாகவே கேட்டு ரசிக்க வேண்டும் விரும்புவுவதாக பி.டி.எஸ் தெரிவித்துள்ளது.

புதிய பிரிவில் உள்ள விதிகளின்படி, பாடல்களில் ஆசிய மொழிகளின் பயன்பாடு கட்டாயம் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கில மொழிகயை அதிகம் கலந்து பயன்படுத்தும் பயன்படுத்தும் பி.டி.எஸ் போன்ற குழுக்களுக்கு இந்த விதிமுறை நியாயமற்ற ஒன்றாக அமைகிறது.

2021 முதல் 2023 வரை கிராமி விருதுகளில் தொடர்ச்சியாக 3 முறை 'Best Pop Duo - Group Performance' பிரிவில் பிடிஎஸ் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply