• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியா தாண்டிகுளத்தில் கப் ரக வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

இலங்கை

வவுனியா,  தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனம் தப்பியோடியுள்ளது.

கனகராஜன்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் பயணித்த அதே திசையில் பின்னால் வந்த கப் ரக வாகனம், மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் தப்பியோடியுள்ளது.

இவ்விபத்தில் கனகராஜன்குளத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமாரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கப் ரக வாகனத்தையும் அதன் சாரதியையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Leave a Reply