• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜப்பானில் நில அதிர்வு  - 40,000க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவிப்பு

ஜப்பானின் கியூசு தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வினைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவித்து வருவதாக கியூசு மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கியூசு தீவின் உட்பகுதியில் பதிவான இந்த 7.1 ரிக்டர் அளவிலான நில அதிர்வினால், ஹிகாவா நகரில் குடிநீர் மற்றும் மின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானின் பொது ஊடகமான NHK செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள அவசரகால மின் உற்பத்தி நிலையங்களில் பழுது ஏற்பட்டுள்ளதால், ஹிகாவா நகர மண்டபம் உள்ளிட்ட பல கட்டடங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன.
 

Leave a Reply