4 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்..
சினிமா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக உருவான திரைப்படம் ஜனநாயகன். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிய இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விஜய் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றாலே, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் அவருடைய கடைசி படம் என்றால் கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்பதில்லை.
கடந்த வாரம் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள். முதலமைச்சர் விஜய் என்கிற காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை இப்படத்தை கொண்டாடி தீர்த்தார்கள்.
விஜய்யின் திரைப்படம் என்றாலே கண்டிப்பாக வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும். முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸ் களைகட்ட ஆரம்பிக்கும்.
இந்த நிலையில், 4 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 210 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.






















