• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கருப்பன் வாரான் டா, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் சூர்யாவின் கருப்பு... 

சினிமா

நடிகர் சூர்யா, சூரரைப் போற்று படத்திற்கு பிறகு பெரிய அளவில் ஹிட் கொடுக்க போராடி வந்தார்.

பெரிய பட்ஜெட்டில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவான கங்குவா வசூலில் வேறு புரட்சி செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் படம் முதலுக்கே மோசமாக படு தோல்வி அடைந்தது.

அதன்பின் சூர்யாவின் சினிமா கெரியரை தூக்கி நிறுத்தும் வகையில் அமைந்த திரைப்படம் தான் கருப்பு.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்த இந்த கருப்பு திரைப்படத்தில் சூர்யா, த்ரிஷா என பலர் நடித்தார்கள். கடந்த மே மாதம் வெளியான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி மாஸ் வசூல் செய்து இந்த வருடத்தின் வெற்றிப் படங்களின் லிஸ்டில் இடம் பிடித்தது.

ரூ. 130 முதல் ரூ. 150 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 300 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை செய்தது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

ஜீ தமிழில் சூர்யாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் கருப்பு ஒளிபரப்பாக உள்ளது, ஆனால் எப்போது என்ற விவரம் வெளியாகவில்லை.
 

Leave a Reply