பணச்சலவை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார திசாநாயக்க, இன்று (15) நுகெகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 10 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைதாரர்கள் மற்றும் 50,000 ரூபாய் ரொக்கப் பிணையின் பேரில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
சந்தேக நபருக்குப் பயணத் தடையையும் நீதிமன்றம் விதித்தது.
வீரகெட்டியப் பகுதியில் ஒரு நபருக்கு கலால் வரி உரிமம் வழங்குவதாக உறுதியளித்து ரூ. 27,500,000/= மோசடி செய்தது தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, அந்தப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேக நபருக்கு எதிரான விசாரணையைத் தொடங்கியிருந்தது.


