TamilsGuide

கமல் 50 விழாவில் சரோஜாதேவி பேசியது ...

எம்ஜிஆரின் நல்ல குணம் மற்றும் சிவாஜியின் நடிப்பு ஆகியவற்றை ஒருங்கே இணைய பெற்றவர் கமல் மட்டும் தான். அவரை ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து வாழ்த்துகிறேன் என நடிகை சரோஜா தேவி தெரிவி்த்துள்ளார். 

விழாவில் நடிகை சரோஜா தேவி பேசுகையில், அழகான என் மகன் கமல். மிடுக்கான தோற்றம் கொண்ட ஒரு ஹீரோ. அவர் நடித்த குணா படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்களை போன்ற நடிகைகள் எல்லாம் மேக்கப் போட்டுக்கொண்டு முகத்தை அழகாக்கி கொள்வோம். ஆனால் அழகான கமல் மேக்கப் போட்டு, இருக்கிற அழகையும் கெடுத்துக் கொண்டு நடித்த படம் குணா. அதேபோல் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்த அப்பு கேரக்டரும் ரொம்ப பிடிக்கும். பார்த்தால் பசி தீரும் படத்தில் நான் சிறுவனாக பார்த்த கமல் இப்போது தன் நடிப்பால் எங்கேயோ போய்விட்டார். ஆனால் இன்றும் அதே குணத்துடன் இருக்கிறார். அவருக்கு நடிப்பு புதிது அல்ல. அது அவரின் உடல் மற்றும் மனசோடு கலந்துவிட்டது. கமல் சிறுவனாக இருக்கும் போது நடிகர் திலகத்துடன் நடித்த போது, அவரது நடிப்பு கமலுக்கும் வந்தது. என் அன்பு தெய்வம் எம்ஜிஆருடன் நடித்தபோது அவருடைய நல்லா குணம் வந்தது. அவர் எப்போதும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஒரு தாய் ஸ்தானத்தில் ஆண்டவனை வேண்டுகிறேன். அவரது வீட்டில் இருப்பவர்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து நல்லா பார்த்துக்கணும் என கேட்டு கொள்கிறேன் என்றார்.
 

Leave a comment

Comment