TamilsGuide

எம்.ஜி.ஆரின் திரையுலக வெற்றிக்கும்,இளமைத் தோற்றத்திற்கும் முக்கியக் காரணமாவார்  ஏ. பீதாம்பரம்

எம்.ஜி.ஆரின் திரையுலக வெற்றிக்கும், அவரது நித்திய இளமைத் தோற்றத்திற்கும் அவரது ஒப்பனைக் கலைஞரான ஏ. பீதாம்பரம் முக்கியக் காரணமாவார்.

பீதாம்பரம் நாயர்  கேரளாவைச் சேர்ந்த இவர், 1960களில் இருந்து எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றினார். 

எந்த வயதிலும் திரையில் இளமையாகத் தெரிய, பீதாம்பரம் எம்.ஜி.ஆருக்குச் செய்த "ஸ்பெஷல் மேக்கப்" பெரிதும் உதவியது.

எம்.ஜி.ஆர் என்றாலே நினைவுக்கு வரும் பளபளப்பான முகம் மற்றும் பிரத்யேக மீசை அமைப்பு, இவரால் வடிவமைக்கப்பட்டவை ஆகும்.

எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலத்திலிருந்தே இறுதிப் படம் வரை (மதுரையை மீட்டிய சுந்தரபாண்டியன்) இவரே மேக்கப் மேனாக இருந்தார்.

பீதாம்பரம், தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கும் ஒப்பனை செய்துள்ளார்.

முகநூல் பதிவு- பிரசாந்த்

Leave a comment

Comment