TamilsGuide

பதுளை மாநகர சபையிலிருந்து NPP உறுப்பினர் விலகல்

தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினரான மஹிந்த குணசேகர, பதுளை மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் இப்பதவியிலிருந்து விலகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில், பதுளை மாநகர சபையின் புதிய NPP உறுப்பினராக ஜயசேன ரத்நாயக்க பதவியேற்றார்.

ஊவா மாகாண ஆளுநரும் சட்டத்தரணியுமான கபில ஜயசேகர முன்னிலையில் ரத்நாயக்க பதவியேற்றுக்கொண்டார்.
 

Leave a comment

Comment