TamilsGuide

பெரியவர்களை மதிக்கும் அந்த மாண்புதான் எஸ்.பி.பியை சிகரம் தொட வைத்தது

இசை நிகழ்ச்சியின் போது 
எஸ் பி பி , பொது மேடையில், பொதுமக்கள் முன்னிலையில், தன்னுடன் பாடிய மூத்த பின்னணி பாடகி இசைக்குயில் பி.சுசீலா அவர்களின்  கால்களில் விழுந்து ஆசி 
வாங்கினார். 
எஸ்.பி.பி முதலாவதாக பாடிய பாடல் அடிமைப்பெண் என்ற படத்தில் பி.சுசீலாவுடன் பாடிய டூயட் பாடல் " ஆயிரம் நிலவே வா
அடுத்து சாந்தி நிலையம் என்ற படத்தில் அதே பி.சுசீலாவுடன் பாடிய மற்றுமொரு டூயட் பாடல் " இயற்கை எனும் இளைய கன்னி" என்ற பாடலுமாகும். 
எனவே அந்த மரியாதையை எஸ்.பி.பி அனைவரது முன்னிலையில் மேடையில் பி.சுசிலா அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
பெரியவர்களை மதிக்கும் அந்த மாண்புதான் எஸ்.பி.பியை சிகரம் தொட வைத்தது.

Prashantha Kumar

Leave a comment

Comment