• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் வியாபாரத்துக்கு சென்ற முதியவரின் பணத்தினை அடித்துப் பறித்த இனந்தெரியாத நபர்கள்

இலங்கை

நேற்றையதினம் வியாபாரத்துக்கு சென்ற முதியவர் ஒருவரது பணமானது இருவரால் அடித்துப் பறிக்கப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த முதியவர் நேற்றையதினம் சக்கரத்தையில் இருந்து நவாலி செல்லும் வீதியால் வியாபாரத்துக்கு செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வழிமறித்து இடம் கேட்பது போல் பாசாங்கு செய்துள்ளனர்.

பின்னர் அவர்மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அவர் வியாபாரத்துக்காக வைத்திருந்த ஒருதொகை பணத்தினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த விடயம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்ககூடும் என அந்த முதியவர் தெரிவித்திருந்த நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன .
 

Leave a Reply