TamilsGuide

ஒரு பாதி அங்கும்... மறுபாதி இங்கும்.... சரிபாதி இன்பம் வருமே...

சத்யா மூவிஸின் இதயக்கனி மறுவெளியிட்டில் பெற்ற மகத்தான வெற்றியைத் தொடர்ந்து சத்யா மூவிஸின் காவல்காரன் படம் விரைவில் டிஜிட்டலில் வெளியாக இருக்கிறது. மகிழ்ச்சியான விஷயம். மக்கள் திலகம் நடித்த சத்யா மூவிஸ் படங்கள் எதுவும் யூடியூபில் இல்லை. அதேபோல, நான் ஆணையிட்டால் எனக்கு மிகவும் பிடித்த படம். அதையும் சத்யா மூவிஸ் நிறுவனம் வெளியிட வேண்டும். இன்னொரு ஆசையும் உண்டு. காவல்காரன், நான் ஆணையிட்டால், கண்ணன் என் காதலன் ஆகிய சத்யா மூவிஸ் படங்கள் கருப்பு வெள்ளை படங்கள். அதை வண்ணமாக்கி வெளியிட்டால் நிச்சயம் மக்களிடம் வரவேற்பை பெறுவதோடு, லாபத்தையும் ஈட்டிக் கொடுக்கும்.

கன்னட நடிகர் ராஜ்குமாரை, கன்னட எம்.ஜி.ஆர். என்று அழைப்பார்கள். மக்கள் திலகம் மீது ராஜ்குமார் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர். ராஜ்குமார் நடித்த கஸ்தூரி நிவாஸா என்ற திரைப்படம் 1971-ல் வெளியாகி வெற்றி பெற்றது. படம் கருப்பு வெள்ளைப் படம்தான். ஆனால், 2014ல் இந்தப் படத்தை வண்ணப் படமாக்கி வெளியிட்டார்கள். படம் மீண்டும் மக்களின் வரவேற்புடன் வெற்றி பெற்றது.

இதில் இன்னொரு விஷயம், இந்தப் படத்தின் கதையை எழுதியவர் ஜி.பாலசுப்பிரமணியம். மக்கள் திலகத்தின் நாடோடி, ரகசிய போலீஸ் 115 படங்களின் கதையை இவர்தான் எழுதினார். கஸ்தூரி நிவாஸா கதையை முதலில் சிவாஜி கணேசனுக்காக ஜி.பாலசுப்பிரமணியம் எழுதியிருக்கிறார். ஆனால், படத்தில் பிறருக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்து கொண்டே இருக்கும் ஒருவன் கடைசியில் இறந்து விடுவான். நமக்கு மட்டுமல்ல, சிவாஜி கணேசனுக்கும் கதை பிடிக்கவில்லை. படம் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பிறகுதான், அதை மீண்டும் தமிழில் அவன்தான் மனிதன் என்ற பெயரில் படமாக்கினார்கள்.

ராஜ்குமாரின் கஸ்தூரி நிவாஸா படம் வண்ணத்தில் வந்து வெற்றி பெற்றது போல, காவல்காரன், தெய்வத்தாய், நான் ஆணையிட்டால் ஆகிய மக்கள் திலகத்தின் சத்யா மூவிஸ் கருப்பு வெள்ளை படங்களை வண்ணமயமாக்கி வெளியிட்டால் நிச்சயம் அவை இப்போதும் வெற்றி பெறும்.

அதுவும் நான் ஆணையிட்டால் படத்தில் நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்... பாடலில் மக்கள் திலகம் இளமைத் துள்ளலுடன் இருப்பார். படம் கருப்பு வெள்ளை என்பதால் கருப்பும் வெள்ளையும் தான் பளிச்சென தெரியும் என்பதால் முதல் பாராவில், மக்கள் திலகத்துக்கு வெள்ளை உடை, சரோஜா தேவிக்கு கருப்பு உடை, அடுத்து மக்கள் திலகத்துக்கு கருப்பு உடையும் சரோஜா தேவிக்கு வெள்ளை உடையும் என்று பொருத்தமாக இருப்பார்கள். பாடல் முடியும்போது சரிவாக கீழிறங்கும் மேடையில் பக்கவாட்டில் இரு கால்களையும் வேகமாக ஸ்டெப் வைத்தபடி மக்கள் திலகம் படு ஸ்பீடாக பக்கவாட்டிலேயே இறங்குவார்.

பாடல் முழுவதும் எம்.எஸ்.வி.யின் இசை துள்ளும். டி.எம்.எஸ்.சும் பிரமாதப்படுத்தி இருப்பார். பாடலில் மூன்று பாராக்களிலும் முடியும்போது ஏ... ஹே.. ஹேய்.. என்று வரும். அதற்கு ஏற்றபடி குரலின் சுருதி பேதத்துக்கு தகுந்தாற்போல, மக்கள் திலகம் தலையை அழகாக லேசாக சாய்த்தபடி பாடுவார்.

சாதாரண வார்த்தையை விட இந்த ஏ.. ஹே... ஹேய்.. என்று சொல்லி வாயசைக்கும்போது கூட மக்கள் திலகத்தின் அதே குறும்பான, அழகான சிரிப்பு மாறாமல் அவரது உற்சாகம் நம்மையும் பற்றிக் கொள்ளும். இந்தக் காட்சிகளை எல்லாம் கலரில் பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

இருவரிடையே அன்போ, மகிழ்ச்சியோ, மரியாதையோ ஒரு வழிப்பாதையாக இருக்கக் கூடாது. பரஸ்பரம் இருந்தால்தான் அந்த நட்போ, உறவோ நீடிக்கும், நிலைக்கும். வாலியும் ரசித்துதான் எழுதியிருக்கிறார். அந்தக் காட்சி....

ஒரு பாதி அங்கும்... மறுபாதி இங்கும்.... சரிபாதி இன்பம் வருமே...

ஏ.. ஹே.. ஹேய்...

(ஸ்ரீதர் சுவாமிநாதன் 
 

Leave a comment

Comment