TamilsGuide

ஆயிரத்தில் ஒருவன்... ஆயிரத்தில் ஒருவன் தான்..

மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியாகி இன்று 61 ஆண்டுகள் நிறைவடைந்து 62 ம் ஆண்டு தொடங்குகிறது. 2014-ல் மறுவெளியீட்டில் டிஜிட்டலில் வெளியானது. மறுவெளியீட்டில் வெளியான படங்களில் வெள்ளி விழா கொண்டாடிய படம் என்ற சிறப்பைப் பெற்றது ஆயிரத்தில் ஒருவன்.
சில படங்களை எடுத்து நஷ்டமடைந்த தயாரிப்பாளர் பி.ஆர். பந்துலுவுக்கு ஆயிரத்தில் ஒருவன் படம் மூலம் மக்கள் திலகம் மறுவாழ்வு அளித்தார்.  படத்தில் மக்கள் திலகத்தின் அழகு, தோற்றப் பொலிவு, வாள் வீச்சு மற்றும் படத்தின் பிரம்மாண்டம், ஒளிப்பதிவு, பாடல்கள், இசை என்று சொல்லிக் கொண்டே போகலாம். முக்கியமாகச் சொல்ல வேண்டியது. ஆர்.கே. சண்முகத்தின் வசனம்.
மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா? என்ற நம்பியாரின் கேள்விக்கு மக்கள் திலகத்தின் பதில்..
"சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்..’

தங்களிடம் உள்ள பொருட்களை எல்லாம் தாய்நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு அனுப்பிவைக்கச் சொல்வார் மக்கள் திலகம். சகாவான புத்தூர் நடராஜன் ‘எல்லாத்தையும் அனுப்பி வெச்சுட்டா நம்ம தேவைக்கு என்ன செய்யறது?’’ என்று கேட்பார். 
அதற்கு குளோசப் ஷாட்டில் காந்தம் போல பார்ப்போரை ஈர்க்கும் ரோஜா முகத்தில் இதழில் புன்னகை நெளிய, மக்கள் திலகம் பதில் சொல்லும் அழகு, புருவங்களை லேசாக உயர்த்தி, தனது கொள்கையை மற்றவர்களுக்கு புரியவைக்கும் வகையில் உறுதியாக அதேநேரம் கனிவாக பதில் சொல்லும் அந்த டயலாக் டெலிவரி... அதெல்லாம் இருக்கட்டும்.
‘‘நமது தேவையே பிறரின் நன்மைதான். மக்களுக்காக நாம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். நமக்கு என்று சேர்த்து வைக்கும் ஆசையை வளர்த்துக் கொண்டால் பிறருக்காக நாம் எதையும் சாதிக்க முடியாது’’
.............. ஆயிரம் சொல்லுங்கள் சார். இந்த வசனத்தை நம் நாடி நரம்புகளில் சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் அவரைத் தவிர வேறு யாரால் பேச முடியும்? மற்றவர்கள் நாடகத்தனத்துடன் ஏற்ற இறக்கமாகப் பேசினால் கூட அது உண்மையாக, உணர்வுபூர்வமாக இருக்காதே?
ஆயிரத்தில் ஒருவன்... ஆயிரத்தில் ஒருவன் தான்..
அவர்.. அவர்தான்.
(ஸ்ரீதர் சுவாமிநாதன் 

 

Leave a comment

Comment