TamilsGuide

மாறுவேடத்தில் படம் பார்க்க வந்த நம்பியார் மனைவி.. எம்ஜிஆர் ரசிகர்களால் தியேட்டரை விட்டு ஓடிய அவலம்!!

க்ளாசிக் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருக்கும் வில்லனாக கலக்கியவர் தான் நம்பியார், எம்.ஜி.ஆர் இருந்தாலும், சிவாஜி இருந்தாலும் இவர்களின் பொதுவான வில்லன் என்றால் நம்பியார் மட்டும் தான். இருவருக்கும் போட்டியாக பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த நம்பியாருக்கு எம்.ஜி.ஆர் எப்போவுமே ஸ்பெஷல் தான். அதற்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த எம்.ஜி.ஆருக்கு நிகரான வில்லனாக நடித்தவர் நடித்திருந்த நம்பியார், சினிமாவில் வில்லன் என்றாலும் நிஜத்தின் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நட்பு வட்டாரங்களில் ஒருவராக இருந்துள்ளார். திரைப்படங்களில் இவர் எம்.ஜி.ஆரை அடிப்பதால், ரியல் வாழ்க்கையில் அவரது ரசிகர்களிடம் பல சிக்கல்களை சந்தித்துள்ளார். அந்த வகையில் மாறுவேடத்தில் மனைவியுடன் எம்.ஜி.ஆர் படம் பார்க்க போன நம்பியாருக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்தள்ளது. 

படத்தில் எம்.ஜி.ஆரை அடித்தார் என்பதற்காக நம்பியார் வீட்டின் முன்பு கல் எறிந்து கலாட்டா செய்துள்ள எம்.ஜி.ஆர் ரசிகர்கள், நம்பியார் காரில் சென்றுகொண்டிருக்கும்போது அவரது காரை வழிமறித்து மிரட்டிய சம்பவங்கள் கூட நடந்நதுள்ளது. அந்த வகையில், தான் நடித்த ஒரு படத்தை பார்ப்பதற்காக மாறுவேடத்தில் தனது மனைவியுடன் சென்றிருந்த நம்பியாரை அவரது மனைவி அவசர அவசரமாக வெளியில் அழைத்து சென்றுள்ளார்.

எம்.ஜி.ஆர் 2 வேடங்களில் நடித்து வெளியான படம் எங்க வீட்டு பிள்ளை. பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்தில், முக்கிய வில்லனாக நம்பியார் நடித்திருந்தார். இந்த படத்தில் நான் வித்தியாசமாக நடித்திருக்கிறேன் இந்த படம்தை நாம் போய் பார்க்கலாம் என்று, தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு மாறுவேடத்தில் தனது மனைவியுடன் தியேட்டருக்கு சென்றுள்ளார் நம்பியார். தியேட்டரில் கூட்டம் குவிந்து இருந்துள்ளது.

படத்தில் நம்பியார் எம்.ஜி.ஆரை சாட்டையால் அடிக்கும் சீன் வந்துள்ளது. முதல் அடி அடித்தவுடன், அங்கிருந்த ரசிகர் ஒருவர் ஏய் என்று சொல்ல, மற்றொருவர் தலைவரையே அடிக்கிறியா நீ என்று கேட்க, மற்றொருவர் ஸ்கிரீனை கிழித்துள்ளார். இதை பார்த்துக்கொண்டிருந்த நம்பியாரின் மனைவி, மாறுவேடத்தில் இருப்பது நீங்கள் தான் என்று தெரிந்தால் உங்களை கிழித்துவிடுவார்கள் வாங்க போய்டலாம் என்று சொல்லி, நம்பியாரை அவசர அவசரமாக வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். தான் வில்லனாக நடித்த படம் என்றாலும் எம்.ஜி.ஆரை அடித்தால் ரசிகர்கள் நிஜமாக அடிக்க வந்துவிடுவார் என்று நம்பியார் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

தமிழச்சி கயல்விழி

Leave a comment

Comment