TamilsGuide

வரி சக்தி 2026  தேசிய வரி வாரம் ஆரம்பம்

வரி சக்தி 2026′ தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

நாட்டில் சுயமாக வரி செலுத்தும் கலாசாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் ‘வரி சக்தி 2026’ தேசிய வரி வாரம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, சுங்கப் பணிப்பாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் தமது கருத்துகளை முன்வைத்தனர்.
 

Leave a comment

Comment