சிவாஜி கணேசன் சாரோட படங்கள்னாலே மாஸான ஆக்டிங், கிளாசிக்கான கதைகள் தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா, அவரோட படங்கள்ல இன்னொரு செம்ம சுவாரசியமான விஷயமும் இருக்கு! அவரே பல படங்கள்ல பல வேடங்கள்ல நடிச்சு அசத்தியிருக்காரு. அதே சமயம், அவரோட படங்கள்ல சக நடிகர்களும் டபுள் ரோல், ட்ரிபிள் ரோல்-னு நடிச்சு பப்ளிக்-ஐ மிரள வச்சிருக்காங்க!
அப்படி 'சிவாஜி யுனிவர்ஸ்'-ல மல்டிபிள் கேரக்டர்கள்ல நடிச்சு ஸ்கோர் பண்ண டாப் ஸ்டார்ஸ் யார் யார்?
சந்திரபாபுவின் அன்லிமிடெட் காமெடி!
சபாஷ் மீனா (1958): சிவாஜி சாரை விட அதிக சம்பளம் வாங்கி, மெட்ராஸ் பாஷை பேசுற ரிக்ஷாக்காரனாவும், அப்பாவி இளைஞனாவும் வந்து தியேட்டரையே சிரிக்க வச்சாரு நம்ம சந்திரபாபு. இந்த படத்தோட காமெடி சீன்ஸ் தான் இன்னைக்கு வரைக்கும் பல படங்களுக்கு இன்ஸ்பிரேஷன்!
ராஜா (1972): இந்த பிளாக்பஸ்டர் மூவில சந்திரபாபு ஒரு படி மேல போய் ட்ரிபிள் ரோல்ல (3 வேடங்கள்) கலக்கியிருப்பாரு!
சைல்ட் ஆர்ட்டிஸ்ட்டா கமலஹாசன்:
பார்த்தால் பசி தீரும்: ஏவிஎம் தயாரிப்புல பீம்சிங் இயக்கின இந்த கிளாசிக் படத்துல, நகமலஹாசன் குழந்தை நட்சத்திரமாவே இரட்டை வேடங்கள்ல வந்து க்யூட்டா நடிச்சிருப்பாரு.
எம்.ஆர். ராதாவின் மிரட்டல் காம்போ!
பலே பாண்டியா: வெறும் 11 நாட்கள்ல, தினமும் 4 மணி நேரம் மட்டும் தூங்கி சிவாஜி சார் நடிச்சு முடிச்ச வரலாற்று சாதனை படம்! இதுல சிவாஜி 3 ரோல் பண்ணியிருந்தா, அவருக்கு டஃப் குடுக்குற மாதிரி எம்.ஆர். ராதா 2 ரோல்ல வந்து மிரட்டியிருப்பாரு. "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" பாட்டு எவர்கிரீன் ஹிட்!
சௌகார் ஜானகி!
புதிய பறவை: சிவாஜி புரொடக்ஷன்ஸின் இந்த எவர்கிரீன் த்ரில்லர்ல, சௌகார் ஜானகி இரட்டை வேடங்கள்ல நடிச்சிருப்பாங்க. இதுல வர்ற "பார்த்த ஞாபகம் இல்லையோ" சாங் இன்னைக்கும் நம்ம பிளேலிஸ்ட்ல இருக்குற மெலடி!
சினிமா வரலாற்றிலேயே ஒரு விசித்திர சாதனை!
சொர்க்கம் (1970): ஒரு படத்துல எத்தனை பேர் தான் மல்டிபிள் ரோல் பண்ணுவாங்க? ஆனா இந்த படத்துல ஆர்.எஸ். மனோகர் 2 வேடங்கள், எம்.ஆர்.ஆர். வாசு 5 வேடங்கள், சச்சு 5 வேடங்கள்னு எல்லாரும் சேர்ந்து வேடங்களாலேயே சொர்க்கம் காட்டியிருப்பாங்க!
லீட் ஆக்ட்ரெஸ்களின் டபுள் ஆக்ஷன் தர்பார்!
தங்கைக்காக (1971): சிவாஜிக்கு தங்கச்சியா வந்து, இரட்டை வேடங்கள்ல எமோஷனல் ஆக்டிங்ல அசத்தியிருப்பாங்க நடிகை லட்சுமி.
வாணி ராணி (1974): வாணிஸ்ரீ வாணி, ராணினு ரெண்டு கேரக்டர்கள்ல வந்து சிவாஜி மற்றும் முத்துராமன் சாருக்கு ஜோடியா கலக்கியிருப்பாங்க.
சோ ராமசாமியின் பொலிட்டிக்கல் காமெடி!
தங்கப்பதக்கம்: எஸ்பி சௌத்ரியா சிவாஜி சார் மிரட்டின இந்த படத்துல, ஒரு பக்கம் போலீஸ் கான்ஸ்டபிளாகவும், இன்னொரு பக்கம் அரசியல்வாதியாகவும் வந்து தன்னோட பாணியில பொலிட்டிக்கல் சட்டையர் காமெடி பண்ணியிருப்பாரு சோ ராமசாமி.
இதே சோ இன்னும் ஒருபடி மேல போய் ரோஜாவின் ராஜா படத்லே ட்டிரிள் ரோல் பண்ணியிருப்பார்.
80-களின் ட்ரெண்ட் செட்டர்கள்!
வசந்தத்தில் ஓர் நாள் (1982): நடிகை ஸ்ரீப்ரியா ஒரே படத்துல சிவாஜி சாரோட காதலியாகவும், அப்புறம் மகளாகவும் டபுள் ரோல்ல நடிச்சு ஆச்சரியப்படுத்தினாங்க.
பரீட்சைக்கு நேரமாச்சு (1982): முக்தா சீனிவாசன் டைரக்ஷன்ல, ஒய்.ஜி. மகேந்திரன் ஒரு கேரக்டர்ல உருக்கமான மகனாவும், இன்னொரு கேரக்ட்டர்ல ரவுடியாவும் வந்து நடிப்புல வெரைட்டி காட்டியிருப்பாரு.
அப்பாவைத் தொடர்ந்து மகனின் அதிரடி!
தராசு (1984) & வம்ச விளக்கு: அப்பா படத்துல மத்தவங்க டபுள் ரோல் பண்ணா, மகன் பிரபு சும்மா இருப்பாரா? 'இளையதிலகம்' பிரபு தராசு படத்துல கோழையாகவும் வீரனாவும், வம்சவிளக்கு படத்துல இன்னொரு டபுள் ரோல்லயும் வந்து தானும் ஒரு சிறந்த வாரிசுனு நிரூபிச்சாரு!
தமிழ் சினிமாவுல ஒரு ஹீரோவோட படங்கள்ல, மத்த கோ-ஸ்டார்ஸ் இந்த அளவுக்கு இரட்டை வேடங்கள்லயும், பல வேடங்கள்லயும் நடிச்சு சாதனை படைச்சது நம்ம 'நடிகர் திலகம்' படங்களின் ஸ்பெஷல் மட்டுமே!
இந்த லிஸ்ட்டுலே 'மிஸ் 'ஆனவங்களை 'கெஸ் ' பண்ணி கமெண்ட்ல சொல்லுங்க!
செந்தில்வேல் சிவராஜ்


