1977 ஜூன் 30 #மக்கள்திலகம் முதன் முதலாக தமிழகத்தின் 6-ஆவது முதல்வராக பதவியேற்றார்
பதவியேற்ற பின் முதன் முதலாக அலுவலகம் செல்கிறார். அங்கு அரசு உயர் அலுவலர்களின் ஆலோசனை கூட்டதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை பத்து மணி, கோட், சூட் சகிதமாய் அரசு உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் அலோசனை அரங்கத்துக்குள் குழுமியிருந்தனரம்.
சிறிது நேரத்தில் TMX 4777 பதிவு எண் கொண்ட அவரின் பச்சை நிற அம்பாசடர் கார் விரென்று அங்கு நுழைகிறது.
காலத்தை வென்ற காவிய நாயகன் கார் கதவை திறந்து முதன் முறையாக அலுவல வாசலில் கால் பதிக்கிறார்.
காத்திருந்த காவல் உயர் அலுவலர்கள் விரைப்புடன் சல்யூட் வைக்க... அரசு உயர் அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்க..
பாதுகாவலர்கள் புடைசூழ அலுவலகத்திற்குள் விடுவிடு என ஆலோசனை அரங்கத்திற்குள் நுழைகிறார்.
"ஆட்சியை மக்கள் என்னிடம் நம்பி ஒப்படைத்து இருக்கிறார்கள். உடனடியாக அவர்களுக்கு செய்ய வேண்டிய நல்ல திட்டங்களை சொல்லுங்கள். ஆக வேண்டியதை நான் பார்த்து கொள்கிறேன்"
என்று மாவட்ட ஆட்சியர்களிடமு,உயர் அலுவலர்களிடமும், ஆலோசனை கேட்கிறார்.
அப்பொழுது அந்த நேரத்தில், அந்த அந்த அரங்கு ஓரத்தில் வண்ணம் பூசிக்' கொண்டிருந்த ஒரு இளைஞர், எவரையும் அனுமதிக்காத அந்த கூட்ட வளாகத்துக்குள் தடையை மீறி நுழைந்து விடுகிறார்.
காவலர்களின் கட்டுப்பாட்டை மீறினாலும் அந்த மக்கள் தலைவர், அந்த மனிதரை அருகில் அழைத்து, வந்த நோக்கத்தை சொல்ல சொல்கிறார்..
"எனக்கென்று எதுவும் கேட்க வரவில்லை. தலைவா! கிராமங்களில் இன்னமும் பாமர மக்கள் மக்கி போன சோளக் கூழைத்தான் சாப்பிட்டு வருகிறார்கள்.
நெல்லுச்சோறு என்பது மாசத்துல ஒருநாள் அல்லது வாரத்துல ஒருநாள், இல்லாட்டி நல்ல நாள் பெரிய நாளைக்குத்தான் நெல்லு சோற்றை பார்க்க முடியுது.
இது நமக்கு ஆண்டவன் விதித்த விதி என்றே மக்கள் நம்பி கொண்டிருக்கிறாரம். அந்த அளவுக்கு வறுமையை பழகிக்கொண்டு, சகித்துவாழ முன்பிருந்த ஆட்சியாளர்களால் பழக்கப்படுத்த விடப்பட்டிருக்கிறார்கள்.
அதை மட்டும் போக்கி காட்டுங்கள். உங்கள் ஆட்சியை பொற்கால ஆட்சி என்று போற்றப்படும்." என்கிறார்.
கூறியவன் ஒரு எளியவன்தானே என்று நினைக்காமல், அந்த குடிமகனின் கோரிக்கையை குறித்து கொள்ளுங்கள் என்று அங்கிருந்த அலுவலகளிடம் ஆணையிடுகிறார்.
கொடுமையிலும் கொடுமையான பசியை போக்க வேண்டும். உங்களுக்கு தெரியமோ? தெரியாதோ? ஆனால், எனக்கு தெரியும் பசியின் கொடுமை.
என் ஆட்சியில் 'பாலாறு தேனாறு ஓடும்' என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் மக்கள் பசிக் கொடுமையை அனுபவிக்க ஒருக்காலும் விட மாட்டேன்.
என் மக்கள், தினமும் அரிசி சோறு சாப்பிடுவதற்கான திட்டத்தை சொல்லுங்கள். அதற்கு ஆகும் செலவை சொல்லுங்கள். நிதி ஒதுக்கி தருகிறேன்.
என் மக்கள் பசி போக்க அரிசி எங்கிருந்து கிடைத்தாலும் எப்பாடு பட்டாவது,வாங்கி வருகிறேன்.
உங்களுக்கு அரைமணி நேரம் அவகாசம் தருகிறேன். திட்டமிட்டு சொல்லுங்கள்"
-என்று மேசை மீது கிடந்த நாளிதழை எடுத்து புரட்ட ஆரம்பிக்கிறார் புரட்சித்தலைவர்.
அரைமணி நேரத்திற்கு பிறகு 'அந்த திட்டத்திற்கு ஆகும் செலவு' என்று ஒரு தொகையை சொல்கின்றார்கள் அலுவலர்கள்.
உடனே புரட்சித்தலைவர் அவர்கள் "இரண்டு மடங்காக்கி தருகிறேன்" என்று
அந்த இடத்திலேயே ஆணையிட்டார்.. ஒரு எளிய குடிமகன் வைத்த
கோரிக்கையை வேதமாக எடுத்து செயல்பட்டிருக்ககிறார் மக்கள் திலகம்!
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் கிராமங்களில் இதுவரை சோளக்கூழை சாப்பிட்டு வந்த மக்களுக்கு மூன்று வேலையும் அரிசி சோறு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது......
Madhan Gopal


