யாழ்ப்பாணக் கடல்சார் வாழ்வியலைப் பேசும் ‘அந்தோனி’ திரைப்படம்: ஜெனீவாவில் விமரிசையான காட்சி மற்றும் பாராட்டு மழையில் படக்குழு!
பகுதி 01
ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘அந்தோனி’ திரைப்படம், அண்மையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள புகழ்பெற்ற ‘Pathé Balexert’ திரையரங்கில் திரையிடப்பட்டது.
திரையரங்கில் படத்தைப் பார்த்த சினிமா இரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நெய்தல் நில ஒழுக்கமான "இரங்கல்" (பிரிவும் பிரிவு நிமித்தமும்) என்ற கோட்பாட்டை, இன்றைய நவீன காலக் கதைகளத்தோடு மிகவும் நேர்த்தியாக இணைத்துள்ளார் இயக்குனர்.
கடலும் கடல் சார்ந்த மக்களின் வாழ்வியலையும், அதில் ஏற்படும் பிரிதல், இருத்தல் மற்றும் இரங்கல் ஆகிய அகத்திணைப் பண்புகளையும் மிக ஆழமாக இத்திரைப்படம் பதிவு செய்துள்ளது.
இசைஞானியின் மாயாஜாலமும், பிரமிப்பூட்டும் ஒளிப்பதிவும்
இசைஞானி இளையராஜா அவர்களின் பின்னணி இசை, கடலோடு கலக்கும் இயற்கையின் நாதத்தை திரையோடு மிக அற்புதமாகக் கலந்து, படத்தின் உணர்வுகளை உச்சத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளது.
யாழ்ப்பாணக் கடற்கரையின் எழில்மிகு காட்சிகள், சர்வதேசத் தரத்திலான உயர்தர ஒளிப்பதிவின் மூலம் பெருந்திரையில் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.


TamilsGuide
யாழ்ப்பாணக் கடல்சார் வாழ்வியலைப் பேசும் அந்தோனி திரைப்படம் - ஜெனீவாவில் விமரிசையான காட்சி மற்றும் பாராட்டு மழையில் படக்குழு!
