இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு - பாடகர் அசித மறைவு
இலங்கை
இலங்கை பாடகர் ருக்மன் அசித தமது 48 வது வயதில் காலமானார்.
சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ருக்மன் அசித, இன்று (29) காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள இசைத்துறையில் பல பாடல்களை பாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேடை இசை நிகழ்ச்சிகளிலும் தவிர்க்க முடியாத ஒரு பாடகராக அசித விளங்கியமை குறிப்பிடத்தக்கது.






















