TamilsGuide

காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று

இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று (28) இடம்பெற்றது.

பலாலி உதயகலைவாணி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காலை 8.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இடம்பெறுகின்றது.

36 வருடங்கள் கடந்து, சொந்த நிலங்களில் வாழ முடியாது, எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும், அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் எங்கள் நிலங்களை விட மாட்டோம், என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நிலமே எங்கள் மூச்சு, அது இல்லையேல் வாழ்வு போச்சு, அரசே இராணுவத்தை வெளியேற்று மக்கள் குடியேற, போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பலாலி பகுதி பொது மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

Leave a comment

Comment