ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி வரும் சங்கமம் குளோபல் அகாடமி மற்றும் சங்கமிலியா ஹாலிடேஸ் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அதன் நிறுவனர் கே. தினேஷ்குமார் நேற்றைய தினம் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி முழுமையான விளக்கமளித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் 5000க்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்கேற்புடன் பிரம்மாண்ட பரதநாட்டிய நடனப் பயிற்சி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
உலகளவில் இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்த இந்நிகழ்ச்சி குறித்துஇ கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக இந்த கின்னஸ் சாதனைக்கான பதிவுக்கட்டணமாக 5000 அல்லது 6000 ரூபாய் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் உண்மையில் 4100 மாணவர்களிடமிருந்து தலா 4500 ரூபாயே பதிவுக்கட்டணமாகப் பெறப்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் எஞ்சிய மாணவர்களிடம் கட்டணம் செலுத்த முடியாத பட்சத்தில், ஆசிரியர்களின் பரிந்துரையின் பேரில் எவ்வித கட்டணமும் இன்றி அவர்கள் சாதனை நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். News
இந்த நிதிகள் அனைத்தும் இலங்கையிலுள்ள சங்கமிலியா நிறுவனத்தின் கணக்கிற்கே பெறப்பட்டதே தவிர, இந்திய நிறுவனத்திற்கோ அல்லது தனிநபர்களுக்கோ அனுப்பப்படவில்லை என்றும் இதற்கான வரவு செலவு கணக்குகள் அனைத்தும் முறையாகப் பேணப்பட்டு வருவதோடு, அரசாங்கத்திடமிருந்து எவ்வித நிதி உதவியும் கோரப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


