• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாரதிராஜா மறைந்த 17 நாட்களில் பாக்யராஜ் மரணம்

சினிமா

பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பாக்யராஜின் மறைவால் திரைத்துறையினரும், ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

1979-ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, அதன் பின்னர் பல்வேறு ஹிட் படங்களை வழங்கிய இயக்குனர் பாக்யராஜ். 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தனது படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடம் பிடித்தவர்.

பாக்யராஜ், சினிமாவின் தனது 50ம் ஆண்டை நிறைவு செய்ததையொட்டி சமீபத்தில் இவருக்கு விழா எடுத்து கொண்டாடப்பட்டது.

ஆனால், இதற்கெல்லாம் தொடப்புள்ளியாக இருந்தவர் மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா.

பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குநராக 16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில், சிறப்பு ரோஜாக்கள் போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய பின்னர் இயக்குநராகவும், நடிகராகவும், கதை, திரைக்கதை, வசன ஆசிரியராகவும் பெரும் வெற்றி பெற்றார்.

பாக்யராஜின் ஆஸ்தான குருவான பாரதிராஜா வயது மூப்பு காரணமாக கடந்த 10ம் தேதி காலமானார்.

பாரதிராஜா மறைந்த வடு இன்னும் ஆராத நிலையில், மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ஓர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தனது குரு காலமான 17 நாட்களில் சிஷ்யருமான இயக்குனர் பாக்யராஜூம் உயிரிழந்துள்ளது திரைத்துறையிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply