TamilsGuide

பவிஷின் லவ் ஓ லவ் படத்தின் டிரெய்லர் வெளியானது

நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாராயண் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் லவ் ஓ லவ். பவிஷுடன், தெலுங்கு யூடியூப் பிரபலம் நாக துர்கா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

போகன் திரைப்பட இயக்குநர் லக்ஷ்மனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மகேஷ் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஜூலை 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானநிலையில், இன்று டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
 

Leave a comment

Comment