TamilsGuide

கொலம்பிய அதிபராக தேர்வாகி இருக்கும் டி லா எஸ்ப்ரியெல்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கொலம்பிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கோடீஸ்வரரும் அரசியலுக்கு புதியவருமான டி லா எஸ்ப்ரியெல்லா, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக தேர்தல் ஆணையத்தால் புதன்கிழமை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கொலம்பியாவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்.

"கொலம்பிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, வரும் ஆண்டுகளில் நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்," என்று மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து வளர்ந்து வரும் கொலம்பியாவுடனான நெருங்கிய நட்பை இந்தியா பெரிதும் மதிக்கிறது என்று மோடி கூறினார்.
 

Leave a comment

Comment