உலக கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (25) 75 அமெரிக்க டொலருக்கும் கீழ் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, அமெரிக்காவின் WTI (West Texas Intermediate) வகை கச்சா எண்ணெயின் விலை ஒரு பெரலுக்கு 70.05 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது.
அதேவேளை, உலகளவில் பரவலாக வர்த்தகம் செய்யப்படும் Brent வகை கச்சா எண்ணெயின் விலை ஒரு பெரலுக்கு 73.32 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
மேலும், மேர்பன் (Murban) வகை கச்சா எண்ணெயின் விலை 4.57 சதவீதம் சரிந்து, ஒரு பெரலுக்கு 66.45 அமெரிக்க டொலராகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஆரம்பமான காலப்பகுதியில், உலக சந்தையில் ஒரு பெரல் கச்சா எண்ணெயின் விலை 68 முதல் 70 அமெரிக்க டொலர்களுக்கு இடையில் காணப்பட்டிருந்தது.
அண்மைய விலைச் சரிவு, உலகளாவிய எரிபொருள் சந்தையில் நிலவும் மாற்றங்களையும், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளின் தாக்கத்தையும் பிரதிபலிப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.























