இதுவரை உலகளவில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்..
சினிமா
விஜய் ஆண்டனி - இயக்குநர் சசி கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். இப்படத்திற்கு பின் மீண்டும் இவர்களது கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் நூறு சாமி.
ஆனால், இப்படத்தில் தன்னை ஹீரோவாக முன்னிறுத்துவதை விட, நடிகை ஸ்வாசிகாவை கதையின் நாயகியாக நடிக்க வைத்துள்ளார்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்குநர் சசி இயக்கியுள்ளார். கடந்த வாரம் திரைக்கு வந்த நூறு சாமி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், நூறு சாமி திரைப்படம் 6 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் இப்படம் ரூ. 9 கோடி வசூலித்துள்ளது.






















