TamilsGuide

கல்யாணம் வேணாம், அதை தாண்டி பண்ணுங்க!! பாரதிராஜா படத்தில் பாக்யராஜ் பார்த்த வேலை!!

கண்ணதாசன், முத்துலிங்கம், கங்கை அமரன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். இதில், கங்கை அமரன் எழுதிய பூவரசம்பூ பூத்தாச்சு என்ற பாடலை கேட்ட அந்த படத்தின் உதவி இயக்குனர் பாக்யராஜ் அந்த பாடலை திருத்தி எழுதியுள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் உருவான 2-வது படம் கிழக்கே போகும் ரயில் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பாக்யராஜ், கங்கை அமரன் எழுதிய முக்கியமான பாடல் ஒன்றை திருத்தியுள்ளார். இந்த பாடல் பெரிய ஹிட் பாடலாக அமைந்தது

1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. முதல் படத்திலேயே அப்போது வளர்ந்து வரும் நட்சத்திரங்களாக இருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோரை வைத்து இயக்கி வெற்றி கண்ட பாரதிராஜா, அதன்பிறகு தான் இயக்கிய கிழக்கே போகும் ரயில், மண் வாசனை, கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, புதிய வார்ப்புகள் என அனைத்து படங்களிலும் புதுமுகங்களை அறிமுகம் செய்தார்.

அந்த வரிசையில் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகளில் இன்றுவரை தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக இருப்பவர் தான் ராதிகா. பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளான இவர், பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமானார். இவர் மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலம் தான் நடிகர் சுதாகரும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். காதலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

கண்ணதாசன், முத்துலிங்கம், கங்கை அமரன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். இதில், கங்கை அமரன் எழுதிய பூவரசம்பூ பூத்தாச்சு என்ற பாடலை கேட்ட அந்த படத்தின் உதவி இயக்குனர் பாக்யராஜ் அந்த பாடலை திருத்தி எழுதியுள்ளார். இது குறித்து கங்கை அமரன் பாக்யராஜூவுடன் பங்கேற்ற ஒரு நிகழ்வில் பேசியுள்ளார். அதில், பாடல் எல்லாம் நீங்கள் மாற்றுவீர்கள், நடப்பதோ மார்கழி மாதம், தையிலே நிச்சயதார்த்தம், நாதஸ்வரம் நேரம் வரும், தினமும் நெல்லு சோறாக்கி, நெத்திலி மீனை குழம்பாக்கி, மச்சான் வந்தால், ஆக்கி கொடுப்பேன், மார்கழி முடிந்ததையும் வாராதோ என்று எழுதி இருந்தேன்.

இந்த பாடலை பார்த்த நீங்கள், வரிகள் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருக்கலாமே என்று சொன்னீர்கள் என்று சொல்ல, இதை கேட்ட பாக்யராஜ் இல்லை நீங்கள் சரியாகத்தான் எழுதி இருந்தீர்கள். மச்சான் வந்தால், ஆக்கி கொடுப்பேன், மார்கழி முடிந்து தையும் வாராதோ என்று எழுதினீர்கள்.

கல்யாணம் ஆகி இதை பண்ண வேண்டும் என்று பவித்ரமாக நீங்கள் போனீங்க, நான், மச்சான் வந்தால், ஆக்கி கொடுப்பேன், என்று சொல்லி கல்யாணத்தை தாண்டி போலாம் என்று மார்ரில் சாய்ந்து புதையல் எடுப்பேன் என்று சொன்னேன் என பாக்யராஜ் சொல்ல, நீங்கள் திருத்தம் சொல்லி நான் எழுதிய பாடல் இதுதான் என கங்கை அமரன் கூறியுள்ளார். 

Kowsalya Tamizhachi
 

Leave a comment

Comment