தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய முதல் 2 படங்கள் பெரிய வெற்றியை கொடுத்தது. இதில் ஒரு படததில் சத்யராஜ் நடிக்க வேண்டும் என்று செல்வமணி விரும்பியுள்ளார். ஆனால் அவர் கால்ஷீட் கொடுக்க மறுத்தால், கேப்டன் நடித்துள்ளார்.
இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்துவர் தான் ஆர்.கே.செல்வமணி. 1990-ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான புலன் விசாரணை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குரனாக அறிமுகமானார். கேப்டனுடன் ரூபினி, ராதாரவி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில், நடிகர் சரத்குமார் வில்லனாக நடித்திருந்தார். இளையராஜா இசையில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து தனது 2-வது படமாக மீண்டும் விஜயகாந்த் நடிப்பில், கேப்டன் பிரபாகரன் படத்தை இயக்கியிருந்தார். கேப்டனின் 100-வது படம் என்ற பெயரில் வெளியான இந்த படமும் புலன் விசாரணை படத்தை விடவும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் கேப்டனுக்கு ஜோடியாக மீண்டும் ரூபினி நடித்திருந்த நிலையில், ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன், காந்திமதி உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடித்த சத்யராஜ் இந்த படத்தில் கேப்டனின் நண்பனாகவும், மன்சூர் அலிகான் இந்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே பெரிய வெற்றியை பெற்றிருந்தது. அதே சமயம் புலன் விசாரணை படத்தின் வெற்றியால் தான் ஆர்,கே.செல்வமணிக்கு கேப்டன் பிரபாகரன் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் புலன் விசாரணை படமே கேப்டன் நடிக்க இருந்த படம் இல்லை என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த ஆர்.கே.செல்வமணி, அப்போது அவருடன் நெருக்கமாக இருந்த சத்யராஜ்ஜிடம் கால்ஷீட் வாங்கி கொடுக்கும்படி கேட்டிருந்தார்.அவரை வைத்து தனது முதல் படத்தை இயக்கிக்கொள்வதாகவும் செல்வமணி மணிவண்ணனிடம் கூறியுள்ளார். ஆனால் அவரோ நான் கால்ஷீட் கேட்டால் தருவார், ஆனால் அடுத்தவர்களுக்காக நான் எப்படி கேட்க முடியும். நீ போய் கேட்டு வாங்கிக்கொள் என்று கூறியுள்ளார். இதை கேட்டு ஆர்.கே.செல்வமணியும் சத்யராஜூவை சந்தித்து கால்ஷீட் கேட்க, அவரோ புதுமுக இயக்குனர்களின் இயக்கத்தில் நடிப்பதில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், நீங்கள் ஒரு படம் இயக்கி வெற்றியுடன் வாருங்கள் அதன்பிறகு கால்ஷீட் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியான ஆர்.கே.செல்வமணி, முதல் படத்தை பெரிய வெற்றிப்படமாக மாற்ற வேண்டும். மற்றொன்று இனிமேல் இவருடன் இணைந்து படம் பண்ண கூடாது என்று முடிவு செய்துள்ளார். அதன்பிறகு பல கட்ட போராட்டத்தை சந்தித்த செல்வமணி, இறுதியாக கேப்டனிடம் சென்று கதை சொல்லி, தனது முதல் படத்தை இயக்கியுள்ளார்.
புலன் விசாரணை படம் பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அவருக்கு கேப்டன் அடுத்த படத்தையும் கொடுத்தார். ஆனால் புலன் விசாரணை படத்தின் வெற்றியால் பாதிக்கப்பட்ட சத்யராஜ் அதன்பிறகு புதுமுக இயக்குனர்களின் படத்தில் நடிக்க தொடங்கியதாக தகவல்கள் உள்ளது. சத்யராஜ் நடிக்க மறுத்ததால், கேப்டனிடம் சென்ற ஆர்.கே.செல்வமணி அடுத்தடுத்து 2 மெகாஹிட் படங்களை கொடுத்து அசத்தியுள்ளார்.
Kowsalya Tamizhachi


