• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் பல வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை

இலங்கை

வவுனியாவின் பல வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை நேற்று (23) மேற்கொண்டனர்.

இறைவரி திணைக்களத்தின் வருமான வரி அறவீட்டு அதிகாரிகள் தமது செயற்பாட்டை நாடு முழுவதும் முன்னெடுத்து வரி அறவீட்டு நடவடிக்கைகளை சீர் செய்தும் ஒழுங்கமைத்தும் வருகின்றனர்.

அதற்கமைவாக வவுனியாவிலும் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரி அறவீடு தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி வவுனியாவில் நகைக் கடைகள், ஹாட்வெயார்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவை மீது திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply