4 நாளில் பட்டய கிளப்பும் விஜய் ஆண்டனியின் நூறு சாமி பட வசூல்...
சினிமா
சிலர் நாயகன் ஆக வேண்டும் என்றே சினிமாவில் களமிறங்குவார்கள், ஆனால் தரமான கதைகள் தேர்ந்தெடுப்பதில் சொதப்புவார்கள்.
பலர் ஒரு ஐடியாவில் சினிமாவில் என்ட்ரி ஆனால் அவர்களை வேறொரு பாதைக்கு கொண்டு செல்லும். அப்படித்தான் இசையமைப்பாளராக சினிமாவில் களமிறங்கியவர் இப்போது தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து சிறந்த நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் விஜய் ஆண்டனி.
சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் நூறு சாமி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
பிச்சைக்காரன் பட ஹிட் கொடுத்த சசி இயக்கத்திலேயே விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் தான் நூறு சாமி.
மேலும் சுவாசிகா, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். பொதுவாக பெண்கள், குடும்பம் போன்ற விஷயங்களை மையப்படுத்திய படங்களாக இயக்கும் சசி இப்படத்தையும் அப்படி ஒரு ஜானரில் தான் எடுத்துள்ளார்.
படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே மக்கள் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர், முக்கிய பெண்களின் மனதை தொட்ட படமாக நூறு சாமி அமைந்துள்ளது. படம் ரிலீஸ் ஆகி 4 நாள் முடிவில் ரூ. 8 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.






















