• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Auto pilot-ஆல் வந்த வினை - வீட்டுக்குள் புகுந்த டெஸ்லா கார் - மூதாட்டி பலி 

எலான் மஸ்க் உடைய டெஸ்லா நிறுவன கார்கள் அதன் ஆட்டோ பைலட் எனப்படும் ஓட்டுநர் இல்லாத தானியங்கி முறையில் இயங்குவதற்கு பிரசித்தம்.

இது ஒரு வசதி என்பதை விட இதில் ஆபத்துகள் உள்ளத்தையும் பல நிபுணர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதை மெய்ப்பிக்கும் விதமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கேட்டி பகுதியில் விபத்து ஒன்று நடந்துள்ளது.

அங்கு கடந்த வெள்ளிகிழமை இரவு, மார்த்தா ஆவிலா என்ற 76 வயது மூதாட்டி தனது வீட்டின் முன்பக்க வரவேற்பறையில் அமர்ந்திருந்தார்.

அப்போது, சாலையில் ஆட்டோ பைலட் மோடில் மைக்கேல் பட்லர் என்பவருக்கு சொந்தமான டெஸ்லா மாடல் 3 கார் ஒன்று அதிவேமாக வந்துள்ளது.

கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி, வீட்டின் செங்கல் சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மார்த்தா, உடனடியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

காரில் அமர்ந்திருந்த மைக்கேல் பட்லருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் டெஸ்லாவின் ஆட்டோபைலட் மற்றும் FSD எனப்படும் முழு தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Reply