• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை ரம்யா கிருஷ்ணனின் second love - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

சினிமா

காதல் தோல்வியால் மனமுடைந்த காதலர்கள், தங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்கவும், மீண்டும் காதலைக் கண்டறியும் சாத்தியக்கூறுகளை ஆராயவும் புதிய ரியாலட்டி ஷோ-வான ‘செகண்ட் லவ்’ தொடரை தமிழில் ஜியோ ஹாட்ஸ்டார் ஒளிபரப்ப உள்ளது.

இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க உள்ளார். இந்த தொடரில் மொத்தம் 12 போட்டியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு, தங்களின் உறவுகளில் இரண்டவது வாய்ப்பை புதுப்பிக்கும் வகையில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த போட்டியில் உரையாடல்கள் மற்றும் பகிரப்பட்ட அனுபவங்கள் மூலம் போட்டியாளர்கள் உணர்ச்சி ரீதியான சவால்களை கடந்து, மீண்டும் தங்கள் இதயங்களை திறக்க தயாராக இருக்கிறார்களா என்பதை முடிவு செய்வார்கள்.

'செகண்ட் லவ்' நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெய்லர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோருடன் இணைந்து நடிகை ரம்யா கிருஷ்ணன், விஜயா முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகவுள்ளது.
 

Leave a Reply